நாகையிலிருந்து 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் அரவைக்காக தருமபுரி மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பப்பட்டன.
நாகை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், அரவைக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பப்படுகின்றன. அதன்படி, நாகை ரயில் நிலையத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் 2 ஆயிரம் டன் நெல் அரவைக்காக தருமபுரி மாவட்டத்துக்கு அனுப்பப்பட்டது.