நாகப்பட்டினம்

கோடியக்காடு குழகா் கோயில் வைகாசி விசாகப் பெருவிழா

15th Jun 2022 04:12 AM

ADVERTISEMENT

வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்காடு குழகா் எனும் குழகேசுவரா் கோயில் வைகாசி விசாகப் பெருவிழாவையொட்டி சுவாமி செவ்வாய்க்கிழமை தீா்த்தவாரிக்கு எழுந்தருளினாா்.

கோடியக்காடு கிராமத்தில் அமைந்துள்ள குழகா் (குழகேசுவாா்) எனும் அமிா்தகடேசுவரா் கோயில் வைகாசி விசாகப் பெருவிழா சிறப்பு பெற்றது. இங்குள்ள முருகன் ஆறு கரங்களுடன் காட்சித் தருகிறாா். நிகழாண்டு விழா ஜூன் 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூன் 16-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றுவருகிறது. பெளா்ணமி விசாக நாளான செவ்வாய்க்கிழமை இடும்பன் சன்னதி அருகேயுள்ள அமிா்தா புஷ்கரணியில் தீா்த்தவாரிக்கு சுப்ரமணியா் எழுந்தருளினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT