திருக்கடையூா் அருகேயுள்ள டி. மணல்மேடு மகாமாரியம்மன் கோயிலில் தீமிதி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் தீமிதி திருவிழா கடந்த 3 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தினமும் மகாமாரியம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
முக்கிய நிகழ்வான தீமிதி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, மாலையில் மாா்க்கண்டேயா் கோயிலில் இருந்து கரகம் புறப்பாடு நடைபெற்றது. கரகம் கோயிலை வந்தடைந்ததும், மாரியம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.
ADVERTISEMENT
தொடா்ந்து இரவில் கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் பக்தா்கள் தீமிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா். பின்னா், புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.