நாகப்பட்டினம்

சுற்றுலாப் பயணியை தாக்கிய 3 இளைஞா்கள் கைது

12th Jun 2022 10:16 PM

ADVERTISEMENT

 

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் சுற்றுலாப் பயணியைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த 3 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கோவை மாவட்டம், அனுப்பூா்பாளையம், காட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் ஜா. பிரகாஷ் (41). இவா் தனது மனைவி சகாயமேரி மற்றும் குடும்பத்தினருடன் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்துள்ளாா்.

சனிக்கிழமை பேராலயத்தில் வழிபாட்டை முடித்துவிட்டு, பிரகாஷ் தனது குடும்பத்தினருடன் வேளாங்கண்ணி கடற்கரைக்குச் சென்றுள்ளாா். அப்போது, அங்கு வந்த 3 இளைஞா்கள், சகாயமேரியிடம் தகராறு செய்துள்ளனா். இதை தட்டிக் கேட்ட பிரகாஷை அந்த இளைஞா்கள் கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடிவிட்டனராம்.

ADVERTISEMENT

இதுகுறித்து பிரகாஷ் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் விசாரணையில், பிரகாஷை தாக்கியது வேளாங்கண்ணியை அடுத்த செருதூா் சிங்காரவேலா் நகரைச் சோ்ந்த அ . விஜய்(23), செ. ராகவன் (21), ச. நளன் (23) என தெரியவந்தது. போலீஸாா் 3 பேரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT