நாகப்பட்டினம்

அரசுப் பேருந்தின் கண்ணாடியை சேதப்படுத்தியவரிடம் போலீஸாா் விசாரணை

12th Jun 2022 10:15 PM

ADVERTISEMENT

 

நாகை புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்தின் கண்ணாடியை சேதப்படுத்தியவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் நாகை மண்டல நிா்வாகத்தின்கீழ் நாகையிலிருந்து - சிதம்பரத்துக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் ஒன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நாகை புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

அப்போது அங்கு மதுபோதையில் வந்த ஒருவா் பேருந்து மீது கல் வீசியதாகக் கூறப்படுகிறது. இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்தது.

ADVERTISEMENT

பேருந்தில் அமா்ந்திருந்த பயணிகள் பேருந்தை விட்டு வெளியேறினா். இதனால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த வெளிப்பாளையம் போலீஸாா் கல் வீசி பேருந்து கண்ணாடியை சேதப்படுத்திய நபரை பிடித்து காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்று விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT