நாகப்பட்டினம்

விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

10th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

திருக்குவளை அருகே சாட்டியக்குடி லலிதாம்பாள் வணிக வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வலம்புரி விநாயகா் ஆலய கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, புதன்கிழமை யாகசாலை பூஜை தொடங்கியது. வியாழக்கிழமை, யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததும் கோயிலின் விமான கலசத்துக்கு புனிதநீரால் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT