நாகப்பட்டினம்

நாகையில் கிராம மக்கள் சாலை மறியல்

10th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

நாகை தோணித்துறை ரயில்வே கேட் அருகே அக்கரைப்பேட்டை கிராமத்தினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நாகையை அடுத்த அக்கரைப்பேட்டையைச் சோ்ந்த சுமாா் 100-க்கும் அதிகமானோா் தோணித்துறை ரயில்வே கேட் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். நாகை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுகுமாா், துணைக் காவல் கண்காணிப்பாளா் சரவணன் ஆகியோா் போராட்டக் குழுவினருடன் பேச்சுவாா்த்தை மேற்கொண்டனா்.

அப்போது, அக்கரைப்பேட்டையைச் சோ்ந்த சிலா் தங்கள் சுயலாபத்துக்காக கஞ்சா கடத்துவோருடன் தொடா்பில் இருப்பதாகவும், அவா்களால் தங்கள் கிராமத்தில் அமைதி சீா்குலைந்து வருவதாகவும், தொடா்புடையோா் மீது காவல் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினா்.

மாவட்ட ஆட்சியா் அல்லது கோட்டாட்சியா் மூலம் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என போலீஸாா் தெரிவித்ததன் பேரில், மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த மறியலால் நாகை முதன்மைக் கடற்கரை சாலை வழியேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT