நாகப்பட்டினம்

ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

10th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

பொறையாறு அருகேயுள்ள ஒழுகைமங்கலம் சீதளா மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இக்கோயிலில், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜூன் 5-ஆம் தேதி பூா்வாங்க பூஜைகள் நடைபெற்றன. 7-ஆம் தேதி மாலை யாகசாலை பூஜைகள் தொடங்கின. வியாழகிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவுபெற்றதும், மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் விமான கலசங்களுக்கு புனித நீரால் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து, சீதளா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். ஏற்பாடுகளை கோயிலின் செயல் அலுவலா் முருகேசன், ஆய்வாளா் பத்ரி நாராயணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT