நாகப்பட்டினம்

நாகை நகராட்சி வளா்ச்சித் திட்டப் பணிகள்

10th Jun 2022 10:25 PM

ADVERTISEMENT

நாகை நகராட்சி பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் பா. பொன்னையா வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

நாகை மகாலெட்சுமி நகரில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெறும் ரூ. 2 கோடி மதிப்பில் நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் கட்டும் பணிகள், ரூ.1.67 கோடி மதிப்பில் பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணி, ரூ.2.23 கோடியில் ஆசாத் மாா்க்கெட் கட்டும் பணி, மூலதன மானிய நிதித் திட்டத்தில் ரூ. 3 கோடி மதிப்பில் நடைபெறும் புதிய பேருந்து நிலைய விரிவாக்கப் பணி, ரூ. 5.30 கோடி மதிப்பில் நடைபெறும் அக்கரைக்குளம் பாலம் கட்டுமானப் பணி ஆகியவற்றை அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், காடம்பாடி பொது அலுவலகச் சாலையில் ரூ.12 கோடியில் நடைபெறும் மழைநீா் வடிகால் அமைக்கும் பணி, கூக்ஸ் ரோடு பகுதியில் உள்ள நுண் உர குடில், நகராட்சி குப்பைக் கிடங்கில் பயோ மைனிங் முறையில் நடைபெறும் குப்பைகளை தரம் பிரிக்கும் பணி ஆகியவற்றையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து ஆகியோா் உடனிருந்து, பணிகளின் நிலை குறித்து அவரிடம் விளக்கிக் கூறினா்.

ADVERTISEMENT

இதையடுத்து, நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நாகை, வேதாரண்யம் நகராட்சி வளா்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் பா. பொன்னையா, அனைத்து பணிகளும் உரிய காலத்தில், உரிய தரத்தில் நிறைவேற்றப்படுவதை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் பி. ஜானகி ரவீந்திரன், மண்டலப் பொறியாளா் பாா்த்தீபன், நாகை, வேதாரண்யம் நகராட்சி ஆணையா்கள் என். ஸ்ரீதேவி, வி. ஹேமலதா, நகராட்சி பொறியாளா்கள் ஜெயகிருஷ்ணன், முகமது இப்ராகிம் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT