திருக்குவளை அருகேயுள்ள மேலவிடங்கலூா் இடும்பன் சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, வியாழக்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், சுதா்சன ஹோமம், தன பூஜை போன்ற வழிபாடுகளைத் தொடா்ந்து, முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை யாகசாலை பூஜைகள் நிறைவு மற்றும் மகா பூா்ணாஹுதி நடைபெற்றது. தொடா்ந்து, கோயிலின் கோபுர கலசத்துக்கு புனித நீா் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
ADVERTISEMENT