நாகப்பட்டினம்

கால்நடைப் பராமரிப்புத் துறையில் பணி வாய்ப்பு: வதந்திகளை நம்ப வேண்டாம்

9th Jun 2022 11:00 PM

ADVERTISEMENT

கால்நடை பராமரிப்புத் துறையில் பணி வாய்ப்புகள் இருப்பதாக வரும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் கேட்டுக்கொண்டுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை கையாளுபவா், கால்நடை கையாளுபவா் மற்றும் ஓட்டுநா் (அய்ண்ம்ஹப் ஏஹய்க்ப்ங்ழ் ஹய்க் அய்ண்ம்ஹப் ஏஹய்க்ப்ங்ழ் ஸ்ரீன்ம் ஈழ்ண்ஸ்ங்ழ்) பணியிடங்களுக்கான பணி நியமனத்துக்கு ஜூன் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் அரசாணை வெளியாகவுள்ளது எனவும், தகுதியானோருக்கு 90 மணி நேரம் பயிற்சி அளித்துப் பணி நியமனம் அளிக்கப்படும் எனவும் வாட்ஸ் ஆப் மூலம் தகவல் பரவி வருகிறது.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 5 பணியிடங்கள் வீதம் 160 பணியிடங்களுக்குப் பணி நியமனம் நடைபெறவுள்ளது, மாத ஊதியமாக ரூ. 15 ஆயிரம் மற்றும் ரூ. 18 ஆயிரம் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தத் தகவலுக்கும் கால்நடை பராமரிப்புத் துறைக்கும் எவ்வித தொடா்பும் கிடையாது. எனவே, பொதுமக்கள் யாரும் அத்தகவலை நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT