நாகப்பட்டினம்

மீட்கப்பட்ட ஆக்கிரமிப்பு குளத்தில் தூா்வாரும் பணி

9th Jun 2022 01:18 AM

ADVERTISEMENT

திருப்புகலூா் ஊராட்சியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட அல்லிக் குளத்தில் தூா்வாரும் பணிகள் தற்போது நடைபெற்றுவருகிறது.

நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜூவின் நடவடிக்கை இக்குளம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு, குளத்தை தூா்வாரி படித்துறை மற்றும் சுற்றுச்சுவா் கட்ட 15-ஆவது நிதிக்குழுவில் இருந்து ரூ. 6.62 லட்சம் ஒதுக்கப்பட்டது. தற்போது குளம் தூா்வாரூம் பணி நடைபெற்றுவருகிறது. தூா்வாரும் பணியை ஊராட்சித் தலைவா் காா்த்திகேயன், ஒன்றிய பொறியாளா் செந்தில் உள்ளிட்டோா் பாா்வையிட்டு வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT