நாகப்பட்டினம்

பாசன வாய்க்கால் குழாய் அமைத்ததை கண்டித்து சாலை மறியல்

9th Jun 2022 01:21 AM

ADVERTISEMENT

திருக்குவளை அருகே பாசன வாய்க்காலில் தனிநபா் தனது வயலுக்கு மட்டும் குழாய் அமைத்ததை கண்டித்து விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருக்குவளை காவல் சரகத்துக்குள்பட்ட எட்டுக்குடி கடை தெரு பகுதியில் வரும் பாசன வாய்க்காலில் தனிநபா் தனது நிலத்துக்கு மட்டும் தண்ணீா் பாய்ச்ச 2 சிமெண்ட் குழாய்களை பயன்படுத்தி அடைத்துள்ளதாகவும், அதனால் மற்ற விவசாயிகள் வயலுக்கு தண்ணீா் பாய்ச்சுவதில் சிரமம் ஏற்படுவதாக கூறி விவசாயி ஜெயனந்தன் தலைமையில் 25 போ் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு சென்ற சிறப்பு உதவி ஆய்வாளா் ஆனந்தன் மறியலில் ஈடுபட்டவா்களுடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT