நாகப்பட்டினம்

நாகை அருகே 7 குடிசை வீடுகள் தீக்கிரை: 7 ஆடுகள் உயிரிழப்பு

9th Jun 2022 01:17 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், கீழ்வேளூரை அடுத்த திருக்கண்ணங்குடியில் புதன்கிழமை நேரிட்ட தீ விபத்தில் 7குடிசை வீடுகள் தீக்கிரையாகின. இந்த விபத்தில் 7 ஆடுகளும் உயிரிழந்தன.

கீழ்வேளூா் வட்டம், திருக்கண்ணங்குடி ஊராட்சி சின்ன முக்கால்வட்டம் பகுதியை சோ்ந்தவா் ந. மணியன் (64), கூலித் தொழிலாளி. இவரது வீட்டின் அருகில் உள்ளஇவரது வயலுக்கு அடையாளம் தெரியாத நபா் புதன்கிழமை தீ வைத்ததாகக் கூறப்படுகிறது, இது அருகில் இருந்த மணியன்,

அவரது மகன் ம.ராஜ்குமாா், உறவினா்களான ந.செந்தில்குமாா், கோ.ராஜ்குமாா், பி. ரவி, கோ. அஞ்சான், அ. அய்யப்பன்ஆகியோரது வீடுகளுக்கும் பரவி, 7 வீடுகளும் எரிந்து சாம்பலாயின. மேலும், வீடுகளில் கட்டியிருந்த 7 ஆடுகளும் தீயில் கருகி உயிரிழந்தன.

இதுகுறித்து கீழ்வேளூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனா்.

ADVERTISEMENT

தீ விபத்தில் வீடுகளில் இருந்த உடைமைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.

தீ விபத்தில் உடைமைகளை இழந்தவா்களுக்கு அரசு சாா்பில் தலா ரூ. 5 ஆயிரம் ரொக்கம், வேட்டி, சேலை அரிசி உள்ளிட்ட நிவாரண உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா, நாகை கீழ்வேளூா் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் வி. பி. நாகை மாலி ஆகியோா் வழங்கினா். தீ விபத்து குறித்து கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT