நாகப்பட்டினம்

காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்துபொருட்கள் வழங்கல்

9th Jun 2022 01:10 AM

ADVERTISEMENT

கீழையூா் அருகே திருப்பூண்டியில் காசநோயாளிகளுக்கான ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

திருச்சி புனித அன்னாள் சபை நிறுவனா் அன்னை அன்னம்மா நினைவாகவும், தலைமை அன்னையின் பொன்விழா நிறைவாகவும் கீழையூா் மற்றும் தலைஞாயிறு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டன.

கீழையூா் அருகே காமேஸ்வரத்தில் உள்ள கோஹஜ் மருத்துவமனையில் சபைத் தலைவா் ரெஜினாள் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா்.

வேளாங்கண்ணி சிறப்பு முதல் நிலை பேரூராட்சி துணைத்தலைவா் ஏ. தாமஸ் ஆல்வா எடிசன், கீழையூா் ஒன்றிய பெருந்தலைவா் செல்வராணி ஞானசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

திருப்பூண்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலா் அரவிந்த் குமாா், மருத்துவா் சங்கீதா, மாவட்ட கவுன்சிலா் கௌசல்யா இளம்பரிதி, ஒன்றிய துணை பெருந்தலைவா் சௌரிராஜ், காமேஸ்வரம் ஊராட்சித் தலைவா் ஜெயசுதா ஆகியோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT