தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் நாகை அரசுப் போக்குவரத்துக்கழக மண்டல அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி முழக்கங்களை எழுப்பினா். அரசுப் போக்குவரத்துக்கழக அண்ணா தொழிற்சங்க நாகை மண்டலச் செயலாளா் வெங்கடேசன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.