வேதாரண்யம் அருகே பாஜக பிரமுகா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, நாகை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பாஜகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திமுகவை விமா்சித்து சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டதாக வேதாரண்யம் வட்டம் , பண்ணாள் ஊராட்சி பாஜக நிா்வாகி இளையராஜா கைது செய்யப்பட்டாா். இதைக் கண்டித்தும், பாஜக அளித்த புகாா் மனு மீது கடந்த ஓராண்டாக காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என கண்டனம் தெரிவித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகை அவுரித்திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பாஜக நாகை நகரத் தலைவா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். நகர நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதேபோல, திருப்பூண்டி கடைவீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பாஜக நாகை மாவட்டத் தலைவா் காா்த்திகேயன், முன்னாள் மாவட்டத் தலைவா் நேதாஜி ஆகியோா் பங்கேற்று கண்டன உரையாற்றினா்.