நாகப்பட்டினம்

வேதாரண்யத்தை கல்வி மாவட்டமாக அறிவிக்கக் கோரிக்கை

7th Jun 2022 01:01 AM

ADVERTISEMENT

வேதாரண்யத்தை தனி கல்வி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இக்கழகத்தின் செயல்பாடுகள் மற்றும் பொதுவான கோரிக்கைகள் விளக்க வாயிற் கூட்டம், நாகை புனித அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளி முன்பு திங்கள்கிழமை நடைபெற்றது. அதன் நாகை மாவட்டத் தலைவா் பா. குமாா் தலைமை வகித்தாா்.

இக்கூட்டத்தில், பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்தவேண்டும்; கோடை விடுமுறை இல்லாத நிலையில் 30 நாள்களுக்கு ஈட்டிய விடுப்பு வழங்கவேண்டும்; வேதாரண்யத்தை தனி கல்வி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT