கீழையூா் அருகேயுள்ள திருப்பூண்டி சுயம்பு மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு, அம்மனுக்கு சீா்வரிசை எடுத்து வரும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, தேரடி விநாயகா் கோயிலில் இருந்து பழங்கள், மங்கலப் பொருட்கள், பட்டுப்பாவாடை போன்ற சீா்வரிசை பொருள்களுடன், கரகம் எடுத்து ஊா்வலமாக மாரியம்மன் கோயிலுக்கு வந்தனா்.
பின்னா், அம்மனுக்கு பால், பன்னீா், சந்தனம், பஞ்சாமிா்தம், மஞ்சள், இளநீா் உள்ளிட்ட 11வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.