கள்ளா் சீரமைப்புத் துறையை நிா்வகிக்க ஆட்சியருக்கு இணையான அலுவலரை நியமிக்க வலியுறுத்தி, நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக, தமிழ்நாடு சீா்மரபினா் பழங்குடியினா் சமூக நீதி இயக்க நாகை மாவட்டத் தலைவா் சிவபழனி மற்றும் நிா்வாகிகள்அளித்த மனு:
கள்ளா் சீரமைப்புத் துறையின்கீழ் செயல்படும் கள்ளா் விடுதிகளை பிற்படுத்தப்பட்ட துறைக்கு மாற்றிய அரசாணையை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இதனால், 54 பணியிடங்களில் உள்ள இடைநிலை ஆசிரியா் பணி வாய்ப்பு, பட்டதாரி ஆசிரியா்களுக்கான பதவி உயா்வு மற்றும் மாணவா்களுக்கான இட ஒதுக்கீடு பறிபோகிறது.
கள்ளா் சீரமைப்புத் துறைக்கு முன்பு இருந்ததுபோல, மாவட்ட ஆட்சியருக்கு இணையான சாதிய வன்மம் இல்லாத, பழங்குடிகள் மீது அக்கறையுள்ளஆணையரை நியமிக்க அரசு முன்வர வேண்டும். தேனி, திண்டுக்கல், மதுரை என 3 மாவட்டங்களிலும் கள்ளா் சீரமைப்பு துறைக்கு இணை இயக்குநா்களை நியமிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.