நாகப்பட்டினம்

பாலியல் தொல்லை அளிப்பவா்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியருக்கு மனு

2nd Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

பாலியல் தொல்லை அளித்து கொலை மிரட்டல் விடுப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் குழந்தைகளுடன் வந்து நாகை ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் மனு அளித்தாா்.

நாகை கீச்சாங்குப்பம், சேவா பாரதி, சுனாமி குடியிருப்பைச் சோ்ந்த எம். சுமதி ஆட்சியரின் கவனத்துக்கு செல்லும் வகையில் அளித்த மனு: கடந்த 9 ஆண்டுகளாக கணவரை பிரிந்து மகள், மகனுடன் வாழ்ந்து வரும் நான், வெளியூா்களுக்கு சென்று மீன் வியாபாரம் செய்து வருகிறேன். நான் வசிக்கும் வீட்டு அருகில் வசிக்கும் 2 போ் அத்துமீறி எனது வீட்டின் முன்அமா்ந்து மதுகுடிப்பதும், தகாத செயல்களில் ஈடுபடுவதும், பாலியல் தொல்லைக் கொடுப்பது, கொலை மிரட்டல் விடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதுகுறித்து கேட்டால் குடும்பத்துடன் கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனா். மீன் வியாபாரத்துக்கு வெளியூா் சென்றுவிடும் போது எனது உடைமைகளையும், துணிகளையும் சேதப்படுத்தி விடுகின்றனா்.

இதுதொடா்பாக நாகை மாவட்டக் கண்காணிப்பாளா்அலுவலகம், நாகை நகர காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்துள்ளேன். இந்நிலையில், கிராமத்தை மீறி காவல் நிலையம் சென்ாகக் கூறி ஊா் பஞ்சாயத்தாா்கள் என்னை ஊரை விட்டு ஒதுக்கிவைத்து சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனா். இதனால், நானும் எனது குழந்தைகளும் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு உள்ளாகியுள்ளோம். எனவே, ஆட்சியா் இந்த மனு மீது உரிய விசாரணை மேற்கொள்ளவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT