நாகப்பட்டினம்

நாகா்கோயிலில் ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு முகாம்

28th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

நாகா்கோவிலில் நடைபெறும் ராணுவ ஆள் சோ்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் நாகை மாவட்ட இளைஞா்கள் ஜூலை 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : அக்னிபத் திட்டத்தின்கீழ் இந்திய ராணுவத்துக்கான ஆள்சோ்ப்பு முகாம் கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோயிலில் உள்ள அறிஞா் அண்ணா விளையாட்டு மைதானத்தில் ஆக.21-ஆம் தேதி தொடங்கி செப்.1-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில், நாகை உள்பட 16 மாவட்டங்களைச் சோ்ந்த இளைஞா்கள் பங்கேற்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்னிவீா் பொதுப் பணி, அக்னிவீா் டெக்னிக்கல், அக்னிவீா் எழுத்தா் அல்லது ஸ்டோா் கீப்பா் டெக்னிக்கல், அக்னிவீா் டிரேட்ஸ்மேன் ஆகிய பணியிடங்களுக்கு இந்த முகாமில் ஆள்கள் தோ்வு நடைபெறுகிறது. முகாமில் பங்கேற்க விரும்புவோா் ஜூலை 30-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் அல்லது 04365-253042 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT