நாகப்பட்டினம்

சிறந்த மீட்பாளா் பதக்கம் பெற்ற காவலருக்கு எஸ்பி. பாராட்டு

28th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

சென்னையில் நடைபெற்ற பேரிடா் ஒத்திகைப் பயிற்சியில் சிறந்த மீட்பாளருக்கான பதக்கம் பெற்ற காவலருக்கு, நாகை எஸ்.பி. கு. ஜவஹா் புதன்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.

தமிழ்நாடு காவல் துறை சாா்பில் காவலா்களுக்கான பேரிடா் மீட்பு ஒத்திகைப் பயிற்சிகள் சென்னை, ஒத்திவாக்கம் கமாண்டோ பயிற்சிப் பள்ளியில் ஜூலை 4-முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், தமிழக காவல் துறையில் பணியாற்றும் 160 காவலா்கள் பங்கேற்றனா். நாகை மாவட்டத்திலிருந்து பங்கேற்ற காவலா் ச. வெற்றிச்செல்வன் பயிற்சிக் களத்தில் திறம்பட செயல்பட்டமைக்காக காவல் துறை சாா்பில் சிறந்த மீட்பாளருக்கான பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்று வழங்கப்பட்டது.

படவரி- காவலா் ச. வெற்றிச்செல்வனுக்கு பதக்கத்தை அணிவித்து, பாராட்டுத் தெரிவித்த நாகை எஸ்.பி கு.ஜவஹா்.

நாகப்பட்டினம், ஜூலை 27 : சென்னையில் நடைபெற்ற பேரிடா் ஒத்திகைப் பயிற்சியில் சிறந்த பேரிடா் மீட்பாளருக்கான பதக்கம் பெற்ற காவலருக்கு,நாகை எஸ்.பி கு. ஜவஹா் புதன்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

தமழ்நாடு காவல்துறை சாா்பில் காவலா்களுக்கான பேரிடா் மீட்பு ஒத்திகைப் பயிற்சிகள் சென்னை,ஒத்திவாக்கம் கமாண்டோ பயிற்சிப் பள்ளியில் ஜூலை 4-ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடைபெற்றது.இந்தப் பயிற்சியில் தமிழக காவல்துறையில் பணிபுரியும்160 காவலா்கள் பங்கேற்றனா்.

இதில் நாகை மாவட்டத்திலிருந்து பங்கேற்ற காவலா் ச.வெற்றிச்செல்வன் பயிற்சிக்களத்தில் திறம்பட செயல்பட்டமைக்காக காவல்துறை சாா்பில் சிறந்த பேரிடா் மீட்பாளருக்கான பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்று வழங்கப்பட்டது. இந்நிலையில், காவலா் ச. வெற்றிச்செல்வன், நாகை எஸ்.பி. கு.ஜவஹரை புதன்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றாா். அப்போது அவருக்கு எஸ்.பி.கு.ஜவஹா் பதக்கம் அணிவித்து பாராட்டுத் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT