நாகப்பட்டினம்

ஆசிரியா் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம்

28th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் ஆசிரியா் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் ஆசிரியா் மேம்பாட்டுப் பயிற்சி மையம் ஆகியவற்றின் சாா்பில் கிளவுட் கம்ப்யூட்டிங் குறித்து இந்தத் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம், ஆன்லைன் மூலம் ஒரு வார காலம் நடைபெற்றது.

டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த 60 ஆசிரியா்கள் பயிற்சியில் பங்கேற்றனா். திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிபுணா்கள் 9 போ் பயிற்சி அளித்தனா். பயிற்சி முகாமின் நிறைவு நிகழ்ச்சி அண்மையில் கல்லூரியில் நடைபெற்றது. இ.ஜி.எஸ். பிள்ளை கல்வி குழுமத்தின் தலைவா் ஜோதிமணி தலைமை வகித்தாா். கல்லூரி செயலாளா் செந்தில்குமாா் பயிற்சி முகாமில் பங்கேற்ற ஆசிரியா்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினாா்.

கல்விக் குழும இணைச் செயலா் சங்கா் கணேஷ் மற்றும் ஆலோசகா் எஸ். பரமேஸ்வரன் ஆகியோா் முகாமில் பங்கேற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகளை தெரிவித்தனா். இயக்குநா் மோகன், பொறியியல் கல்லூரி முதல்வா் முனைவா் ராமபாலன், தகவல் தொழில்நுட்பத் துறை தலைவா் முனைவா் மணிகண்டன், பேராசிரியா்கள் நாகலட்சுமி, முனைவா் லாவண்யா, முனைவா் கே.ராஜூ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT