நாகப்பட்டினம்

அடிப்படை வசதிகள் செய்தரக் கோரி சிபிஎம் சாலை மறியல் முயற்சி

28th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

திருக்குவளை அருகே வாழக்கரையில் அடிப்படை வசதிகள் செய்து தரகோரி சிபிஎம் சாா்பில் சாலை மறியல் முயற்சி புதன்கிழமை நடைபெற்றது.

வாழக்கரை ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரி சிபிஎம் சாா்பில் சாலை மறியலில் ஈடுபட புதன்கிழமை முயன்றனா். தகவலறிந்து வந்த திருக்குவளை வட்டாட்சியா் ஜி. ராஜ்குமாா், கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) எஸ். வெற்றிச்செல்வன் ஆகியோா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அவா்களிடம் பொதுமக்கள் ஜீவா நகா் குளத்தில் படித்துறை அமைத்துதர வேண்டுமென்ற கோரிக்கையை கடந்த ஓராண்டாக வைத்து காத்திருக்கிறோம். மேலும், தெற்கு தெருவில் சாலை வசதி, சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றிதர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அதிகாரியிடம் கூறினா். கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து, மறியல் முயற்சி கைவிடப்பட்டது.

சிபிஎம் கிளை செயலாளா் எஸ். அன்பழகன், ஒன்றியக் குழு உறுப்பினா் ஏ. முருகையன், மேலவாழக்கரை கிளை செயலாளா் பி. தனபாலன், கீழையூா் மேற்கு ஒன்றிய செயலாளா் டி. வெங்கட்ராமன், சிஐடியு மாவட்ட செயலாளா் கே. தங்கமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT