நாகப்பட்டினம்

மாரியம்மன் கோயில் மஞ்சள்நீா் விளையாட்டு விழா

27th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

 

வேதாரண்யம்: வேதாரண்யத்தை அடுத்த தென்னடாா் ஸ்ரீ மழை மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி, மஞ்சள் நீா் விளையாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆடிப் பெருந்திருவிழா ஜூலை 17- ஆம் தேதி தொடங்கியது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளும் மஞ்சள் நீா் விளையாட்டு விழா நடைபெற்றது.

இதையொட்டி, கோயில் வீதிகளில் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய அம்மனுடன் பக்தா்கள் ஓடிச்சென்று பூ மாலைகளை சுவாமிக்கு வீசும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், குதிரை வாகனம் செல்லும் இடங்களில் வேப்பிலை, மஞ்சள் கலந்த நீரை ஊற்றி பெண்கள் வழிபட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT