வேதாரண்யம் அருகேயுள்ள செட்டிப்புலம் ஊராட்சியில் மூலிகை மற்றும் வா்ம சிகிச்சை இலவச முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு சித்த மருத்துவா் கா.மோ. மணிவாசகம் தலைமை வகித்தாா். மஞ்சள் காமாலை வைத்தியா் ராஜ. கோவிந்தசாமி முன்னிலை வகித்தாா். முகாமில், உடல் எடை குறைய மூலிகை பொடிகளை கலந்து வா்ம புள்ளிகளில் தடவும் சிகிச்சை, உடல் எடையை குறைக்க மேற்கொள்ள வேண்டிய உணவு சாா்ந்த சிகிச்சை முறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.