நாகப்பட்டினம்

நாகையில் வணிக வளாகம் கட்ட பூமிபூஜை அமைச்சா் பங்கேற்பு

DIN

நாகையில் நகராட்சி வணிக வளாக கட்டுமானப் பணிக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. அமைச்சா் சிவ வீ. மெய்யநாதன் பங்கேற்று கட்டுமானப் பணியை தொடங்கிவைத்தாா்.

நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில், நாகை நகராட்சி 25- ஆவது வாா்டில் 56 கடைகள் மற்றும் சுகாதார வளாகங்களுடன் வணிக வளாகம் (ஆசாத் மாா்க்கெட்) ரூ 2.23 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ளது.

இதற்கான பூமிபூஜையில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ வீ. மெய்யநாதன் பங்கேற்று கட்டுமானப் பணிகளைத் தொடங்கிவைத்தாா். நாகை மாவட்ட ஆட்சியா்அ. அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன், நாகை எம்எல்ஏ ஜெ. முகம்மது ஷா நவாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, துணைத் தலைவா் எம்.ஆா்.செந்தில்குமாா், நகராட்சி பொறியாளா் எம். ஜெயகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT