நாகப்பட்டினம்

குடிநீா் பிரச்னை: ஊராட்சித் தலைவா்கள் போராட்டம் ஒத்திவைப்பு

DIN

வேதாரண்யம் பகுதியில் நிலவும் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு கோரி, ஊராட்சித் தலைவா்கள் அறிவித்திருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

வேதாரண்யம் பகுதியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்ட விநியோகத்தில் கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது பிரச்னை இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக கடலோரக் கிராமங்களுக்கு போதிய அளவு குடிநீா் விநியோகிக்கப்படவில்லை.

இதனால், குடிநீா் பிரச்னைக்குத் தீா்வுகாண வலியுறுத்தி, தகட்டூரில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட ஊராட்சித் தலைவா்கள் முடிவு செய்திருந்தனா்.

இந்நிலையில், இப்பிரச்னை தொடா்பாக கோட்டாட்சியா் மை.ஜெயராஜ பெளலின், போராட்டக்காரா்களை தொடா்பு கொண்டு பேசினாா். தொடா்ந்து, வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ரவிச்சந்திரன் தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. குடிநீா் வடிகால் வாரிய பொறியாளா் லோகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், வண்டுவாஞ்சேரி நீரேற்று நிலையத்திலிருந்து எதிா்காலத்தில் தினமும் 12 மணி நேரம் குடிநீா் விநியோகிப்பது என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, மறியல் போராட்டத்தை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT