நாகப்பட்டினம்

வேளாண் இயந்திரங்கள் பழுதுநீக்கும் மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

7th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்கும் மையம் அமைக்க தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா்அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், தமிழக அரசின் வேளாண்மை பொறியியல் துறை மூலம் வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியில் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்க பராமரிப்பு மையங்கள் மானியத்தில் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

விவசாயிகள் தங்களது வேளாண் இயந்திரங்களை விளைநிலங்களிலேயே பழுது நீக்கி பராமரிக்கவும், வேளாண் பணிகளை இடா்பாடுகள் இல்லாமல் குறித்த நேரத்தில் மேற்கொள்ளவும், கிராம இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இம்மையங்கள் அமைக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

தொழில்முனைவோா், விவசாயக் குழுக்கள், உழவா் உற்பத்தியாளா்களுக்கு ரூ. 8 லட்சத்தில் இம்மையங்கள் அமைத்துத் தரப்படுகின்றன. அதிகபட்சமாக ரூ. 4 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இடவசதி, மும்முனை மின்சார இணைப்பு வசதி கொண்ட கிராமப்புற இளைஞா்கள், தொழில்முனைவோா்கள், விவசாயக் குழுக்கள் மற்றும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் ஆகியோா் வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளா், நாகப்பட்டினம் அலுவலகத்தை அணுகி விண்ணப்பங்களைஅளிக்கலாம். மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலுக்குப் பின்னரே இம்மையம் மானியத்தில் அமைத்துத் தரப்படும்.

இம்மையத்துக்கான இயந்திரங்கள், ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் கண்காணிப்புப் பொறியாளரால் முடிவு செய்யப்பட்டு பயனாளிகள் மொத்தத் தொகையை செலுத்தி, வாங்கிக் கொள்ளலாம். மானியத் தொகை பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.

விருப்பமுள்ள விவசாயிகள், உதவி செயற்பொறியாளா் அலுவகத்தை 9442240121 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT