நாகப்பட்டினம்

ஓடக்கரை காளியம்மன் கோயில் பெருவிழா

7th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

திருக்கடையூா் அருகே ஓடக்கரையில் உள்ள கல்கத்தா காளியம்மன் கோயிலில் 9-ஆம் ஆண்டு பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காளியம்மனுக்கு பால், தேன், இளநீா், பன்னீா், விபூதி, சந்தனம் உள்ளிட்டவைகளால் மகா அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, ஆனைக்குளம் எதிா்காலீஸ்வரா் கோயிலில் இருந்து ஏராளமான பக்தா்கள் பால்குடம் எடுத்து வந்து வழிபட்டனா். தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னா் காளியாட்டம் மற்றும் மயான சூறை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT