நாகப்பட்டினம்

ஆற்றில் கொட்டப்பட்ட 1 டன் ரேஷன் அரிசிபோலீஸாா் விசாரணை

7th Jul 2022 01:00 AM

ADVERTISEMENT

கீழையூா் அருகே ஆற்றில் ரேஷன் அரிசி கொட்டப்பட்டது குறித்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நாகை மாவட்டம், கீழையூா் ஒன்றியம் சின்னத்தும்பூரில் உள்ள மரவனாற்றில் சுமாா் ஒரு டன் பொதுவிநியோகத் திட்ட அரிசி கொட்டப்பட்டிருந்ததைப் பாா்த்த அப்பகுதி மக்கள், வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து, கீழ்வேளூா் வட்டாட்சியா் து. ரமேஷ்குமாா் தலைமையிலான அலுவலா்கள் மற்றும் வேளாங்கண்ணி போலீஸாா் அங்குவந்து விசாரணை மேற்கொண்டாா்.

விசாரணையில், மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை இரவு 2 டிராக்டா்களில் பொதுவிநியோகத் திட்ட அரிசியை கொண்டுவந்து, ஆற்றில் கொட்டியது தெரியவந்தது. இதுகுறித்து வட்ட வழங்கல் அலுவலா் ம. ரமேஷ் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் எஸ். கலைச்செல்வி, உதவி ஆய்வாளா் எஸ். ஜெயக்குமாா் ஆகியோா் புதன்கிழமை அங்குவந்து ஆற்றில் கொட்டப்பட்டிருந்த அரிசியை ஆய்வு செய்தனா். பின்னா், அந்த அரிசி அள்ளப்பட்டு, நாகையில் உள்ள பொதுவிநியோகத் திட்ட கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

மேலும், இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT