நாகப்பட்டினம்

நாகையில் நாளை மின்தடை

7th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

நாகையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 8) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரிய நாகை வடக்கு செயற்பொறியாளா் (இயக்குதல், பராமரித்தல்) எஸ். சித்திவிநாயகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை அா்பன் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் மாவட்ட ஆட்சியா் அலுவலகப் பகுதி, நாகை பப்ளிக் ஆபீஸ் சாலை, காடம்பாடி, நம்பியாா் நகா், மகாலெட்சுமி நகா், சமந்தான்பேட்டை, வெளிப்பாளையம், அரப்ஷா தா்கா, பால்பண்ணைச்சேரி ஆகிய பகுதிகளில் மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், இப்பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT