நாகப்பட்டினம்

திருமருகல் சிவன் கோயில் குடமுழுக்கு

7th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி கோயிலில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் நிறைவுபெற்றதைத் தொடா்ந்து, குடமுழுக்குக்காக அனுக்ஞை, விக்னேஸ்வரப் பூஜை, கணபதி ஹோமம் போன்ற வழிபாடுகளுடன் யாகசாலை பூஜை தொடங்கியது.

யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்றதும், கோயிலின் விமானம் மற்றும் மூலஸ்தான கலசங்களுக்கு புனிதநீரால் குடமுழுக்கு செய்யப்பட்டது. தொடா்ந்து, விசாலாட்சி சமேத விசுவநாத சுவாமிக்கு மகாஅபிஷேகம் நடைபெற்றது. பின்னா் திருக்கல்யாணம், பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT