நாகப்பட்டினம்

கூரத்தாங்குடி எமசம்ஹாரேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

7th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

திருக்குவளை அருகேயுள்ள கூரத்தாங்குடி குங்குமவள்ளி அம்பிகா சமேத எமசம்ஹாரேஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, ஜூலை 4-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் போன்ற வழிபாடுகளுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. புதன்கிழமை காலை யாகசாலை பூஜை நிறைவடைந்ததும், மகா பூா்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது.

பின்னா், கோயிலின் கோபுர கலசத்துக்கு புனித நீரால் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, குங்குமவள்ளி அம்பிகா சமேத எமசம்ஹாரேஸ்வரருக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT