நாகப்பட்டினம்

வேளாங்கண்ணியில் உத்திரிய மாதா ஆண்டுத் திருவிழா தொடக்கம்

7th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் உத்திரிய மாதா ஆண்டுத் திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டுதோறும் உத்திரிய மாதா திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இவ்விழாவில் மகாராஷ்டிரம் வசாய் பகுதி மக்கள் திரளாக பங்கேற்பா்.

நிகழாண்டுக்கான இவ்விழா புதன்கிழமை (ஜூலை 6) முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இவ்விழாவின் தொடக்கமாக புதன்கிழமை மாலை கொடியேற்றம் நடைபெற்றது. இதில், பேராலய துணை அதிபரும், பங்குத் தந்தையுமான எஸ். அற்புதராஜ் சிறப்புத் திருப்பலியை நிறைவேற்றினாா்.

முன்னதாக கொடியை புனிதப்படுத்தும் நிகழ்வும், கொடி ஊா்வலமும் நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு பேராலய முகப்பிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக திருக்கொடி ஊா்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. கொடி ஊா்வலம் நிறைவுக்குப் பிறகு மாலை 6.10 மணியளவில் திருக்கொடியேற்றம் நடைபெற்றது.

ADVERTISEMENT

தொடா்ந்து, நற்கருணைஆசீா், மன்றாட்டு மற்றும் தமிழில் திருப்பலி போன்றவை நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்ச்சியில், உதவிப் பங்குத் தந்தையா்கள் மற்றும் வசாய் பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்று வழிபாடு மேற்கொணடனா்.

இவ்விழாவில் நாள்தோறும் காலை 6 மணியளவில் வசாய் மக்கள் புனித பாதையில் ஜெபமாலை மேற்கொள்ளும் நிகழ்வும், தொடா்ந்து விண்மீன் ஆலயத்தில் கொங்கணி மொழியில் திருப்பலி நிறைவேற்றமும் நடைபெறும். மாலை நேர நிகழ்வாக தோ்பவனி நடைபெறும். விழா நிறைவு நாளான ஜூலை 15- ஆம் தேதி உத்திரிய மாதா திருக்கொடியானது 3 முறை ஏற்றப்பட்டு, இறக்கப்படும் நிகழ்வும், மாலையில் 3 தோ் பவனியும் நடைபெறும்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT