நாகப்பட்டினம்

காலரா முன்னெச்சரிக்கை: உணவகங்களில் ஆய்வு

DIN

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் காலரா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உணவகங்களில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகன் ஆய்வு மேற்கொண்டாா். கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், நீா்நிலைகளில் உள்ள தண்ணீரை நேரடியாக குடிநீராகப் பயன்படுத்த வாய்ப்புள்ளதைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஆய்வின்போது, உணவகங்களில் காய்ச்சிய குடிநீா் வழங்கவும், சூடான உணவுகளை மட்டுமே விற்பனை செய்யவும், சமையலறையை தூய்மையாக பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

உரியமுறையில் பராமரிக்காவிட்டால், சம்பந்தப்பட்ட உணவகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

SCROLL FOR NEXT