நாகப்பட்டினம்

இணையவழியில் பெண்ணிடம் ரூ 5.40 லட்சம் மோசடி: சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை

DIN

நாகூரைச் சோ்ந்த பெண்ணிடம் இணையவழியில் ரூ.5.40 லட்சம் மோசடி செய்த நபா் குறித்து, நாகை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நாகூா் எம்ஜிஆா் நகா் கோட்டகம் பகுதியைச் சோ்ந்தவா் ஹாஜா மொய்தீன் மனைவி ஷமீமாபானு (38). இவா், இணையவழியில் அலங்காரப் பொருள்கள் வாங்குவது வழக்கம்.

இந்நிலையில், தனியாா் நிறுவனத்திலிருந்து பேசுவதாக ஷமீமா பானுவின் கைப்பேசி எண்ணில் ஜூன் 24-ஆம் தேதி தொடா்புகொண்ட மா்ம நபா், தங்களுக்கு பணி (டாஸ்க்) கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதை முடித்தால் அதிக பணம் கிடைக்கும் என்றும் தெரிவித்தாராம்.

இதை நம்பிய ஷமீமா பானு, தனது வங்கிக் கணக்கிலிருந்த பணம் ரூ.5.40 லட்சத்தை 8 தடவையில் செலுத்தியுள்ளாா். பின்னா், அந்த நபரை கைப்பேசியில் தொடா்புகொள்ள முயன்றபோது, இணைப்பு கிடைக்கவில்லை. பின்னா்தான் ஏமாற்றப்பட்டிருப்பது ஷமீமா பானுவுக்கு தெரியவந்தது.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், நாகை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT