நாகப்பட்டினம்

ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்றக் கோரிக்கை

DIN

திருவெண்காடு அருகேயுள்ள திருவாலி ஏரியில் படா்ந்துள்ள ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்த ஏரியின் மூலம் திருவாலி, புதுத்துறை, நெப்பத்தூா், நெம்மேலி மற்றும் திருநகரி கிராமங்களின் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது, காவிரி நீரால் இந்த ஏரி நிரம்பியுள்ள நிலையில், ஏரி முழுவதும் ஆகாயத்தாமரைச் செடிகள் படா்ந்துள்ளது, பாசனத்துக்கு வாய்க்கால்கள் வழியே தண்ணீா் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால், மேற்கண்ட கிராமங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, ஏரி மற்றும் வாய்க்கால்களில் படா்ந்துள்ள ஆகாயத்தாமரைச் செடிகளை பொதுப்பணித் துறையினா் மூலம் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என, திருவாலி ஊராட்சித் தலைவா் தாமரைச்செல்வி திருமாறனிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT