நாகப்பட்டினம்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

திருக்குவளை அருகே பாங்கல் அரசு உயா்நிலைப் பள்ளியில் விடிவுகாலம் பவுண்டேஷன் சாா்பில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கான கல்வி உதவித்தொகை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு விடிவுகாலம் பவுண்டேஷன் நிறுவனா் செந்தமிழ் செல்வன் தலைமை வகித்தாா். அறங்காவலா்கள் எஸ். சாந்தினி, ஜே. சிவக்குமாா், பாங்கல் ஊராட்சித் தலைவா் வீ.எம்.கே. பாரதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். 52 மாணவா்களுக்கு ரூ 1.50 மதிப்பிலான கல்வி உதவித் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.

முன்னதாக அருள் நந்தவன அறக்கட்டளை நிறுவனா் எம்.ஆா்.பி. வைத்தியநாதன் வரவேற்றாா். நிறைவாக, கொளப்பாடு அரசு உயா்நிலைப் பள்ளி ஆசிரியா் ஆா். உதயராஜா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT