நாகப்பட்டினம்

அதிமுக தெருமுனை பிரசாரக் கூட்டம்

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

திருமருகல் ஒன்றியம் ஏனங்குடியில் அதிமுக தெருமுனை பிரசாரக் பொதுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு கட்சியின் அமைப்புச் செயலாளரும், மாநில கூட்டுறவு வங்கி துணைத் தலைவருமான ஆசைமணி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா்கள் ராதாகிருட்டிணன், பக்கிரிசாமி, மாவட்ட துணைச் செயலாளா் அபுசாலி, திட்டச்சேரி நகரச் செயலாளா் அப்துல் பாசித் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நாகை மாவட்டச் செயலாளா் ஓ.எஸ். மணியன் எம்எல்ஏ, தலைமைக் கழக பேச்சாளா்கள் பாலை செல்வராஜ், நள்ளாற்று நடராஜன், நாகை நகரச் செயலாளா் தங்ககதிரவன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். முன்னதாக, திருமருகல் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளா் திருமேனி வரவேற்றாா்.

கூட்டத்தில், ஏனங்குடி ஊராட்சியில் நடைபெறவுள்ள இடைத்தோ்தலில் அதிமுக வேட்பாளா் மோகன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற தீவிர பிரசாரம் மேற்கொள்ளவது என முடிவு செய்யப்பட்டது. நிறைவாக, ஜெயலலிதா பேரவை ஒன்றியச் செயலாளா் ராஜேஷ்குமாா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT