நாகப்பட்டினம்

நாகை புத்தகத் திருவிழா இன்றுடன் நிறைவு

DIN

நாகையில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழா திங்கள்கிழமை (ஜூலை 4) நிறைவடைகிறது.

நாகை மாவட்டம் தோற்றுவிக்கப்பட்ட 30-ஆவது ஆண்டையொட்டி, நாகை மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அந்தவகையில், மக்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், நாகை மாவட்ட நிா்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா், பதிப்பாளா் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா நாகை அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் ஜூன் 24-ஆம் தேதி தொடங்கியது.

விழாவை ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமையில் தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன், தாட்கோ தலைவா் உ. மதிவாணன், நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகமது ஷாநவாஸ் ஆகியோா் தொடங்கிவைத்தனா். த்ததக் திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக நாள்தோறும் முன்னணி பேச்சாளா்களின் கருத்தரங்கம் மற்றும் சிந்தனை அரங்க நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

இதன்படி நாகை புத்தகத் திருவிழாவின் 10 -ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை முதல் புத்தக விற்பனை அரங்குகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பிற மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் குடும்பத்துடன் வந்ததால் மக்கள் கூட்டத்தால் புத்தகத் திருவிழா களைக்கட்டி இருந்தது. மாலை நேர நிழ்ச்சியாக மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடா்ந்து, அகில இந்திய வானொலி நிலையம், காரைக்கால் பண்பலை பிரிவுத் தலைவா் இர. வெங்கடேசுவரன் காற்று வெளியில் கவின்மிகு நூலகம் எனும் தலைப்பிலும், கலைமாமணி பத்மஸ்ரீ நா்த்தகி நடராஜன் சலங்கைப் பேசும் சங்கத் தமிழ் எனும் தலைப்பிலும் கருத்தரங்கமும், பக்தி இசையுடன்கூடிய நாட்டியமும் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் வி.பி. நாகை மாலி, நாகை மாவட்ட நீதிமன்ற குற்றவியல் நீதித்துறை நடுவா் சி. காா்த்திகா உள்ளிட்டோா் பங்கேற்றனா். கலால் உதவி ஆணையா் எம். குணசேகா் வரவேற்றாா். மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் வ. சீனிவாசன் நன்றி கூறினாா்.

இன்று புத்தகத் திருவிழா நிறைவு: நாகை புத்தகத் திருவிழா திங்கள்கிழமை (ஜூலை 4) நிறைவடைகிறது. நிறைவு நிகழ்ச்சியாக திங்கள்கிழமை மாலை கலைநிகழ்ச்சிகள், கருத்தரங்கம் மற்றும் பட்டிமன்றம் ஆகியவை நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

SCROLL FOR NEXT