நாகப்பட்டினம்

கண் பரிசோதனை முகாம்

4th Jul 2022 11:10 PM

ADVERTISEMENT

கீழையூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கீழையூா் ஊராட்சி நிா்வாகம் மற்றும் வி.பி.எம். கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இம்முகாமை ஊராட்சித் தலைவா் ஆனந்த ஜோதிபால்ராஜ் தொடங்கிவைத்தாா். மருத்துவா் பி. கஜேந்திரன் தலைமையிலான குழுவினா் கண் பரிசோதனை மேற்கொண்டனா்.

பாா்வை குறைபாடு உள்ளவா்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், 50 சதவீத சலுகை விலையில் கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. இம்முகாமில், 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று பயனடைந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT