நாகப்பட்டினம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 269 மனுக்கள் அளிப்பு

4th Jul 2022 11:10 PM

ADVERTISEMENT

நாகை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 269 மனுக்களை பொதுமக்கள் அளித்தனா்.

நாகை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம், ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்து, சிக்கல் கிராமத்தில் நீரில் மூழ்கி இறந்தவரின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதி மூலம் ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.

இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், குறைகளுக்குத் தீா்வு கோரியும் பொதுமக்கள் 269 மனுக்களை அளித்தனா். அந்த மனுக்கள் தொடா்புடையத் துறைகளின் நடவடிக்கைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டன.

நாகை மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் கு. ராஜன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ. செல்வகுமாா் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT