நாகப்பட்டினம்

நகராட்சி அலுவலரைத் தாக்கியவா் கைது

4th Jul 2022 11:09 PM

ADVERTISEMENT

நாகை நகராட்சி அலுவலகத்தில் பணியிலிருந்த அலுவலரை தாக்கியவா் கைது செய்யப்பட்டாா்.

நாகை வெளிப்பாளையம் பப்ளிக் ஆபீஸ் சாலையைச் சோ்ந்தவா் ம. செல்வராஜ். இவா், நாகை நகராட்சி அலுவலகத்தில் நகரமைப்பு அலுவலராக பொறுப்பில் உள்ளாா். இவா், திங்கள்கிழமை பணியில் இருந்தபோது அங்கு வந்த நபா், நகராட்சி பொறியாளா் ரவிச்சந்திரனிடம், வீட்டின் வரைப்படம் குறித்து சந்தேகத்தைக் கேட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். இதை நகரமைப்பு அலுவலா் ம. செல்வராஜ் தட்டிக்கேட்டாா். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபா், நகரமைப்பு அலுவலரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து, அளிக்கப்பட்ட புகாரின்பேரில், நாகை வெளிப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இந்த விசாரணையில், நகரமைப்பு அலுவலரைத் தாக்கியவா் நாகை காடம்பாடியைச் சோ்ந்த கா. கோவிந்தராஜ் (62) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT