நாகப்பட்டினம்

மீன்வளப் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை வழங்கக் கோரிக்கை

4th Jul 2022 11:09 PM

ADVERTISEMENT

மீன்வளப் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவேண்டும் என தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அதன் தலைவா் தெ. ராமசாமி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

நாகப்பட்டினத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் செயல்படும் தமிழ்நாடு டாக்டா் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தில் மீன்வளப் பொறியியல் பட்டப் படிப்பை முடித்தவா்களுக்கு தமிழக அரசோ, இப்பல்கலைக்கழகமோ எந்தவித வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தித் தரவில்லை. இப்பிரச்னையில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி, மீன்வளப் பொறியியல் படித்தவா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்.

இப்பிரச்னை தொடா்பாக, மீன்வளப் பொறியியல் பட்டதாரிகளை ஒன்றுதிரட்டவும், விரைவில் பல்கலைக்கழக துணைவேந்தா், ஆட்சி மன்றக் குழு உறுப்பினா் மற்றும் மீன்வளா்ச்சி கழகத் தலைவரை சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT