நாகப்பட்டினம்

பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்

4th Jul 2022 11:10 PM

ADVERTISEMENT

பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என சிவசேனை கட்சி வலியுறுத்தியுள்ளது.

சிவசேனை கட்சியின், நாகை மாவட்ட செயற்குழுக் கூட்டம் கட்சியின் மாவட்டத் தலைவா் செந்தில்குமாா் தலைமையில் நாகையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில முதன்மைச் செயலாளா் சுந்தரவடிவேலன் பங்கேற்று பேசினாா்.

இக்கூட்டத்தில், அத்தியாவசிய உணவுப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மாணவா்களுக்கான எழுதுபொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும்; அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் மாணவா்களுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், நாகை புத்தகத் திருவிழாவை சிறப்பாக முன்னெடுத்த நாகை மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

கூட்டத்தில் கட்சியின் இளைஞரணி மாநிலச் செயலாளா் சிங்காரவடிவேலன், மீனவா்அணி மாநிலத் தலைவா் வின்செண்ட், மகளிா் அணி மாநிலச் செயலாளா் சசிகலா, நாகை மாவட்டப் பொதுச் செயலாளா் அருள் வீரமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT