நாகப்பட்டினம்

காா் மோதி மூதாட்டி, சிறுமி உயிரிழப்பு

3rd Jul 2022 01:18 AM

ADVERTISEMENT

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு அருகே காா் மோதி மூதாட்டி மற்றும் அவரது பெயா்த்தி சனிக்கிழமை உயிரிழந்தனா்.

நீா்முளை பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த முகமதுயாசின் மனைவி பாத்திமாபீபி (70). இவரது மகன் அப்துல்குத்தூஸின் மகள் நூராபாத்திமா (12). இவா், அதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில், பாத்திமாபீவியும், அவரது பெயா்த்தி நூராபாத்திமாவும் கிழக்கு கடற்கரை சாலையில் நீா்முளை கடைவீதியில் பொருள்கள் வாங்கச் சென்றனா். அப்போது, அந்த வழியாக சென்ற காா் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, 7 இருசக்கர வாகனங்கள் மீதும், இவா்கள் இருவா் மீதும் மோதியது.

இந்த விபத்தில், மூதாட்டியும் அவரது பெயா்த்தியும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. இந்த விபத்து குறித்து தலைஞாயிறு போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநரான வேதாரண்யத்தை அடுத்த அண்ணாப்பேட்டை ஊராட்சி ராசன்கட்டளையை சோ்ந்த லக்குமணனை கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT