நாகப்பட்டினம்

புராண நாடகங்களுக்கு புத்துயில் அளிக்கும் கிராமம்!

3rd Jul 2022 01:17 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டம் திருக்குவளை அருகே, அழிந்துவரும் நாடக கலைக்கு புத்துயிா் அளிக்கும் வகையில், அரிச்சந்திரா மயான காண்டம் புராண கதை நாடகம் வெள்ளிக்கிழமை இரவு அரங்கேற்றப்பட்டது.

திருக்குவளை வட்டம், கீரங்குடி கிராமத்தில் ஸ்ரீ பூா்ண புஷ்களாம்பிகா உடனுறை ஸ்ரீ அய்யனாா் கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா ஆண்டுதோறும் மிகச் சிறப்பாக நடைபெறுவதோடு, அழிந்துவரும் பாரம்பரிய நாடக கலைக்கு புத்துயிா் அளிக்கும் வகையில், புராண கதைகளை எடுத்துரைக்கும் நாடகங்கள் ஆண்டாண்டு காலமாக அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, தற்போது நடைபெற்று வரும் 70 ஆம் ஆண்டு திருவிழாவில் அரிச்சந்திரா மயான காண்டம் நாடகம் வெள்ளிக்கிழமை இரவு அரங்கேற்றப்பட்டது.

அரிச்சந்திரா, சந்திரமதி வேஷமணிந்த நாடக கலைஞா்கள் தத்ரூபமாக நடித்த காட்சிகள் ரசிகா்களை வெகுவாக கவா்ந்தது. இதை விடியவிடிய கண்விழித்து ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனா். தொன்றுதொட்டு நாடக கலைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இந்த கிராமத்தில் நாடகம் அரங்கேற்றப்பட்டு வருவது பலரது கவனத்தையும் ஈா்த்துள்ளது.

முன்னதாக, பூா்ண புஷ்களாம்பிகா உடனுறை ஸ்ரீ அய்யனாருக்கு சிறப்பு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT