நாகப்பட்டினம்

கங்கை முத்துமாரியம்மன் கோயில் ஆண்டு திருவிழா

3rd Jul 2022 11:03 PM

ADVERTISEMENT

நாகூா் அமிா்தா நகரில் உள்ள கங்கை முத்துமாரியம்மன் கோயில் ஆண்டு திருவிழா சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

விழா ஜூன் 30-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி நாள்தோறும் கோயிலில் சிறப்பு வழிபாடுகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான பால்காவடி ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாகூா் பண்டகச் சாலை தெருவில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலிலிருந்து பக்தா்கள் காவடி, அலகு காவடி, ரத காவடிகளை எடுத்து வந்து பக்தா்கள் தங்களது நோ்த்திக்கடன் செலுத்தினா். இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT